விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நிபுணர்கள் விசேட எச்சரிக்கை
விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு Power banks தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பயணம் செய்வோர் தாங்கள் கையில் எடுத்துச் செல்லும் சாதனங்களின் portable Power banks தரமானவையா என்பதை உறுதி செய்யுமாறு நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தென் கொரியாவின் Gimhae விமான நிலையத்தில் Air Busan விமானம் அண்மையில் தீப்பிடித்தது.
அதில் 7 பேர் காயமடைந்தனர். விமானத்தில் இருந்த 169 பயணிகளும் 7 ஊழியர்களும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
விபத்திற்கான காரணம் அறிய விசாரணை தொடர்கிறது. விமானத்தில் பயணிகளின் இருக்கைக்கு மேல் வைக்கப்பட்ட பொதிகளில் இருந்த மின்கலன் விபத்துக்கு காரணமாக இருந்திருக்குமோ என்று தென் கொரிய ஊடகங்கள் சந்தேகம் எழுப்பியுள்ளன.
(Visited 3 times, 3 visits today)