லண்டனில் விபத்துக்குள்ளான விமானம் : நால்வர் பலி!

லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.
சவுத்எண்ட் விமான நிலையத்திலிருந்து நேற்று (13) புறப்பட்ட ஒரு சிறிய விமானம் விபத்துக்குள்ளாகி, தீப்பிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
காவல்துறை, அவசர சேவைகள் மற்றும் விமான விபத்து புலனாய்வாளர்கள் சம்பவ இடத்தில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
காயங்கள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. காயங்களின் எண்ணிக்கை குறித்து உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்த விமானம் டச்சு நிறுவனமான சியோக்ஸ் ஏவியேஷன் இயக்கும் SUZ1 விமானம் என்று கூறப்படுகிறது.
(Visited 1 times, 1 visits today)