ரஷ்ய தாக்குதலில் பிள்ளைகளை பாதுகாப்பதற்கு நிலத்தடி பாடசாலை கட்டியுள்ள உக்ரேன்

உக்ரைனில் தொடரும் போரால் பிள்ளைகளின் படிப்பு பாதிக்கப்படக்கூடாதென்பதில் ஒரு புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ரஷ்ய தாக்குதலிலிருந்து பிள்ளைகளைப் பாதுகாக்க நிலத்தடியில் உக்ரைன் பாடசாலை கட்டியுள்ளது.
புதிய கல்வியாண்டு தொடங்கிவிட்டதால் பாடசாலை செல்லப் பிள்ளைகள் தயாராகிவருகின்றனர். பிள்ளைகள் பாடசாலைகளில் பாதுகாப்பாக இருக்க புதிய நிலத்தடிப் பாடசாலை கூடத்தை அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
அப்படியொரு கட்டடம் கார்கிவ் நகரில் இருக்கிறது. அதில் மூன்று தளங்களுக்குக் கீழேதான் வகுப்புகள் நடக்கின்றன.
வெளியில் நடக்கும் எதுவும் பிள்ளைகளைப் பாதிக்காது. வெடிப்புச் சத்தமோ போர் அபாய ஒலியோ எதுவும் உள்ளே கேட்காது.
பிள்ளைகள் தொந்தரவில்லாமல் படிக்கலாம். பயமில்லாமல் நேரடி வகுப்புகளுக்குச் செல்லமுடியும். கார்கிவ் நகரில் இதுபோன்ற மேலும் ஆறு நிலத்தடி பாடசாலைகள் கட்டப்பட்டுள்ளன.
பாடசாலை போய்வர நிலத்தடி ரயில் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 3 நிலத்தடிப் பாடசாலைகள் எதிர்வரும் ஜனவரியில் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
போர் தொடர்ந்தாலும் பிள்ளைகளின் கல்வி தடைபடக்கூடாது என்பதால் பெற்றோர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கின்றனர்.