மூடுவிழா காணப்போகும் Skype!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரபலமான வீடியோ கால் செயலி ஸ்கைப் (Skype) வரும் மே மாதத்துடன் மூடுவிழா காண உள்ளதாக கூறப்படுகிறது. 2003 ஆண்டு வாய்ஸ் கால் செயலியாக அறிமுகமான ஸ்கைப்பை, 2011ஆம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் கையகப்படுத்தியது.
வீடியோ கால் செயலியாக பரிணமித்த ஸ்கைப், மக்கள் மத்தியில் பிரபலமடைந்தது.
ஸூம் (Zoom) உள்ளிட்ட செயலிகளின் வருகையால் ஸ்கைப்பின் முக்கியத்துவம் குறையத் தொடங்கியது. இந்நிலையில், ஸ்கைப் செயலியை நிரந்தரமாக மூட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
(Visited 1 times, 2 visits today)