பூமியின் மையத்திலிருந்து வெளியேறும் தங்கம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

பூமியின் மையப்பகுதியில் மறைந்திருக்கும் தங்கம் மற்றும் பிற விலைமதிப்பற்ற 8உலோகங்கள் கசிந்து கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.
பெரும்பாலான தங்கம் பூமியின் ஆழமடைந்த மையத்தில் புதைந்திருப்பதாக இதுவரை நம்பப்பட்டு வந்த நிலையில், அந்த மையத்தில் இருந்து தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற பிற உலோகங்கள் மெதுவாக வெளியேறி வருவதைப் புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது.
ஜெர்மனியின் கோட்டிங்கன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஹவாயில் உள்ள எரிமலைப் பாறைகளை ஆய்வு செய்தபோது, பூமியின் மையத்தில் இருந்து மட்டும் வந்திருக்கக்கூடிய ருத்தேனியம் என்ற விலைமதிப்பற்ற உலோகத்தை கண்டறிந்துள்ளனர்.
இந்த உலோகத்தின் அடிப்படையில், பூமியின் மையத்திலிருந்து மேன்டில் பகுதியில் கசிவுகள் நிகழ்வதாகவும், அது வழியாக தங்கம் உள்ளிட்ட உலோகங்கள் மேலேறும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முக்கியமான கண்டுபிடிப்பு, பூமியின் உள் இயக்கங்கள் மற்றும் விலைமதிப்பற்ற உலோகங்களின் நிலை பற்றிய புதிய புரிதலை உருவாக்குகிறது. ஆய்வு முடிவுகள் மே 21 அன்று Nature அறிவியல் இதழில் வெளியிடப்பட்டன.