பிரித்தானிய நாய் உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை
பிரித்தானிய கால்நடை மருத்துவர்கள் நாய் உரிமையாளர்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இது நாய்களிடையே பரவுவதாகக் கூறப்படும் “wewolf syndrome” என்ற நோயை தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, சீனாவில் தயாரிக்கப்பட்ட ஒரு வகையான விளையாட்டு சூயிங்கம் இந்த கடுமையான உடல்நலப் பிரச்சினையை ஏற்படுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியமும் கூறியுள்ளதாகவும், அதைத் தொடர்ந்து பிரித்தானியா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
பிரித்தானிய உணவு தரநிலைகள் நிறுவனம், Barkoo மற்றும் Chrisco தயாரிப்புகளின் கீழ் விற்கப்படும் சூயிங்கத்தை உண்ணும் நாய்களுக்கு பதட்டம், ஆக்ரோஷம், தசைப்பிடிப்பு மற்றும் சில சந்தர்ப்பங்களில் மரணத்தை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது என்று கூறியுள்ளது.
இருப்பினும், பிரித்தானியாவில் இதுவரை இதுபோன்ற வழக்குகள் எதுவும் பதிவாகவில்லை, மேலும் சூயிங் கம் அங்கு பொதுவில் விற்கப்படுவதாக எந்த அறிக்கையும் இல்லை.
இருப்பினும், சில பிரித்தானியர்கள் சர்வதேச விற்பனையாளர்களிடமிருந்து ஒன்லைனில் பொருட்களை வாங்கியிருக்கலாம் என்று உணவு தரநிலைகள் நிறுவனம் எச்சரித்தது.
நெதர்லாந்தும் தற்போது இந்தப் பிரச்சினையை எதிர்கொள்வதாக வெளிநாட்டு ஊடக அறிக்கைகள் தெரிவித்தன.