செய்தி

பிரான்ஸில் 1945 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஏற்பட்டுள்ள மாற்றம் – பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி

பிரான்ஸில் கடந்த ஆண்டு பிறப்பு வீதத்தில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 677,800 குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டாம் உலகப்போரின் பின்னர் வருடம் ஒன்றில் பிறந்த மிகக்குறைவான எண்ணிக்கை இதுவாகும்.

1945 ஆம் ஆண்டு பிரான்ஸில் 645,900 குழந்தைகள் பிறந்திருந்தன. அதன் பின்னர் அதிகரித்துச் சென்ற குழந்தை பிறப்பு சமீப வருடங்களில் மீண்டும் வீழ்ச்சியடைந்த தொடங்கியுள்ளதாக Insee நிறுவனம் அறிவித்துள்ளது.

677,800 குழந்தைகள் 2023 ஆம் ஆண்டில் பிறந்துள்ளன. 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 6.6% சதவீதம் (48,200 குழந்தைகள்) குறைவாகும்.

இடையில், 1983 மற்றும் 1993 ஆம் ஆண்டுகளிலும் குழந்தை பிறப்பு வீழ்ச்சியடைந்திருந்தது. மிக மோசமான பொருளாதார நிலமை காரணமாக இந்த குழந்தை பிறப்பு வீழ்ச்சி பதிவானது.

அந்த எண்ணிக்கையை விட 2023 ஆம் ஆண்டில் குழந்தை பிறப்பு குறைவாகும். இதேவேளை, கடந்த 13 வருடங்களில் பிரான்ஸில் குழந்தை பிறப்பு வீதம் 20% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

(Visited 1 times, 3 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி