பல தசாப்தங்களாக வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் டிரம்ப்பின் தன்னிச்சையான வரிகள்

இந்தியாவுடன் பல தசாப்தங்களாக அமெரிக்கா வளர்த்தெடுத்த உறவைப் பலவீனப்படுத்தும் என அந்நாட்டு மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் கிரிகோரி மீக்ஸ் எச்சரித்துள்ளார்.
இந்தியா மீது ஜனாதிபதி டிரம்ப் விதித்துள்ள கடும் வரி விதிப்பால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவு விவகாரக் குழுவில் உறுப்பினராக உள்ள ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கிரிகோரி மீக்ஸ், டிரம்ப்பின் “தன்னிச்சையான வரிகள்” இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறை பாதித்துள்ளாக தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுடனான சந்திப்புக்குப் பிறகு அவர் இவ்வாறு கூறினார்.
(Visited 2 times, 2 visits today)