நான் அவசரத்தில் இல்லை – இந்தியாவுடனான ஒப்பந்தம் குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு

அமெரிக்கப் பொருட்களுக்கு விதிக்கும் வரிகளை இந்தியா அகற்ற முன்வந்துள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீண்டும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கான ஒப்பந்தத்தை எட்ட எந்த அவசரமும் இல்லை. அமெரிக்க ஏற்றுமதிகளுக்கு உள்ள கட்டுப்பாடுகளை அகற்ற முயல்வதாக அவர் குறிப்பிட்டார்.
நான் அவசரத்தில் இல்லை. எல்லாரும் எங்களுடன் ஒப்பந்தம் செய்ய விரும்புகின்றனர். ஆனால் அதே நேரத்தில் எல்லாருடனும் ஒப்பந்தம் செய்துகொள்ளும் எண்ணமில்லை.
டிரம்ப் விதித்த இறக்குமதி வரிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ந்தத் தற்காலிக நிறுத்தம் ஜூலை மாதம் காலாவதியாகும். அதற்குள் சில நாடுகளுடன் ஒப்பந்தத்தைச் செய்யத் திட்டமிட்டிருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார்.
(Visited 7 times, 10 visits today)