இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் – அவசரமாக வெளிநாடுகளில் வேலை தேடும் அமெரிக்கர்கள்!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

இந்த நிலையில், ஏராளமான அமெரிக்கர்கள் வெளிநாடுகள் வேலை தேடத் தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட அடுத்த 24 மணி நேரத்தில், கூகுள் எனும் தேடுபொறியில், கனடாவுக்குச் செல்ல என்று தேடும் மக்களின் எண்ணிக்கை 1,270 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூகுள் தரவு தெரிவிக்கிறது.

இதுபோலவே, நியூசிலாந்துக்குச் செல்ல என்பதை கூகுளில் தேடுபவர்களின் எண்ணிக்கை 2,000 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஆஸ்திரேலியா செல்வது குறித்து தேடுபவர்களின் எண்ணிக்கை 820 சதவீதம் அதிகரித்திருப்பதகாவும் கூறப்படுகிறது.

இது மட்டுமல்ல, புதன்கிழமை மாலைக்குப் பிறகு, அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியிலிருந்து கூகுளில் தேடியவர்கள், இந்த மூன்று நாடுகளின் குடியேற்ற விதிகளை தேடுவது இதுவரை வரலாறு காணாத வகையில் அதிகரித்திருக்கிறது என்றும் கூகுள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எவ்வளவு பேர் குடியேற்ற விதிகளை தேடியிருக்கிறார்கள் என்ற தகவலை வெளியிடாதபோதும், நியூஸிலாந்து நாட்டின் குடியேற்றம் தொடர்பான இணையதளத்தில், அமெரிக்காவிலிருந்து ஒரே நாளில் 25,000 பேர்7ஆம் திகதி இணையதளத்தைப் பார்வையிட்டுள்ளனர்.

See also  பயணிகளின் பயண கவலையை குறைக்க லாமா சிகிச்சை வழங்கும் அமெரிக்க விமான நிலையம்

இதே நாளில் கடநத் ஆண்டு இந்த எண்ணிக்கை 1,500 ஆக இருந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுபோல, சில குடியேற்ற விவகாரங்களை கவனிக்கும் வழக்குரைஞர்களையும் பலர் தொடர்புகொண்டு சந்தேகங்களையும் கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

(Visited 10 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content