தென்கொரியாவில் தீவிர வெப்பம்: 10 பேர் பலி – மக்களுக்கு குளிர்காற்றை வழங்கும் கடைகள்

தென்கொரியாவில் அனல் பறக்கும் வெப்பத்தால் மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை உயரும் என வானிலை ஆய்வகம் எச்சரித்துள்ளது. இரவிலும் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ்-க்குமேல் நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வெப்ப அலை காரணமாக இதுவரை 1,860க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, சுமார் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சூழலில், நாடு முழுவதும் 18,000-க்கும் மேற்பட்ட கிளைகள் கொண்ட BGF Retail நிறுவனம் தனது கடைகளை பொதுமக்களுக்காக குளிரூட்டிய ஓய்விடங்களாக திறந்துள்ளது.
மக்கள் அங்கு குளிர்சாதன வசதியை பயன்படுத்தலாம். எதையும் வாங்க வேண்டிய அவசியமில்லை என்று நிறுவனத்தின் விளக்கம்.
வார இறுதிக்கு பின் மிதமிஞ்சிய வெப்பம் தொடரும் என்பதால், அதிகாரிகள் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்லாமல் இருப்பதையும், நீர் குடித்து குளிராக இருக்க முயற்சிப்பதையும் வலியுறுத்தியுள்ளனர்.