ஜெர்மனியை அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் – வெளியேறும் புகலிட கோரிக்கையாளர்கள்
ஜெர்மனியில் அகதிகள் தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகளை அதிகரித்து வருகிறன.
இந்நிலையில் ஜெர்மனியில் அகதி கோரியவர்கள் தமது சொந்த விருப்பின் பேரில் சொந்த நாடுகளுக்கு செல்ல வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்காக பெருந்தொகை யூரோவை ஊக்குவிப்பு தொகையாக வழங்கி, சொந்த நாடுகளுக்கு செல்வதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்குகிறது.
ஊக்குவிப்பு தொகை அதிகரிக்கப்பட்ட நிலையில், ஜெர்மனியில் இருந்து தமது சொந்த நாடுகளுக்கு செல்லும் அகதிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஊக்குவிப்பு தொகைக்காக ஜெர்மனி அரசாங்கம் பல மில்லியன் யூரோக்களை ஒதுக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
2024ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் எட்டாயிரத்து 263 அகதிகள் சுயவிருப்பின் பேரில் சொந்த நாடுகளுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.