ஜெர்மனியில் வீடுகளுக்குள் வரும் ஆபத்தான நபர்கள் – பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
ஜெர்மனியில் போலி பார்சல் விநியோகஸ்தர்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.
தமிழர்கள் உட்பட பலரின் வீடுகளுக்கு வந்து சூட்டுமான முறையில் கொள்ளையிடுவதாக தெரிய வந்துள்ளது. இந்த மோசடியில் தம்பதி ஒன்று அண்மையில் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
ஓல்டன்பேர்க் மாவட்டத்தில் போலி பார்சல் விநியோகஸ்தரால் தொடர்ந்து பணம் கொள்ளையடிப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
கொள்ளை முயற்சிக்குப் பிறகு, சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். 25 வயதான அவர் பார்சல் விநியோகம் செய்பவராக நடித்து ஏமாற்றியுள்ளார்.
பொலிஸாரின் தகவலுமைய, , 25 வயதுடைய இளைஞரின் குடியிருப்பில் இருந்து 900 கிராம் கஞ்சா மற்றும் சிறிதளவு கொக்கெய்ன் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
25 வயதான அந்த இளைஞன் இன்னும் மோசமான கொள்ளை நடவடிக்கைகளுக்காக விசாரிக்கப்பட்டு வருகின்றார். சம்பந்தப்பட்ட ஏனைய நபர்களை பொலிஸார் தேடி வருகின்றனர்.