ஜெர்மனியில் மோசடி தொடர்பில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை
ஜெர்மனியில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு மோசடி தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் பல வங்கிகளின் பெயரை பயன்படுத்தி மோசடியான ரீதியில் வாடிக்கையாளர்கள் தொடர்பில் மின்னஞ்சலின் ஊடாக சில தகவல்களை பெற்று பணம் மோசடி செய்யப்படுகின்றது.
அதாவது வங்கியின் வாடிக்கையாளர்களின் தரவுகளை மோசடியான ரீதியில் பெறும் நோக்கில் இந்த நடவடிக்கை இடம் பெறுவததாக வங்கி பணியாளர்கள் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
வங்கி கணக்கை வைத்து இருப்பவர்களுக்கு மோசடியான ரீதியில் மின்னஞ்சல் கிடைக்கப்படுவதாகவும், இந்த மின்னஞ்சலின் ஊடாக சில கேள்விகள் வினவப்படுகின்றது.
இந்த கேள்வியின் பொழுது தற்செயலாக வாடிக்கையாளர்கள் மோசடியான இணையதளத்திற்கு பிரவேசிப்பதாகவும், மேலும் இணையதளத்தின் கேள்விகளுக்கு பதில்களை அனுப்புவதன் மூலம் வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தரவுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது.
குறித்த மோசடி கும்பல் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட தரவுகளை பெற்று வங்கி கணக்கின் ஊடாக பணத்தை பெற்றுக்கொள்வதாக தெரியவந்துள்ளது. ஜெர்மனியின் வங்கியான டொய்ச் வங்கியும் வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கையை வழங்கியுள்ளது.