ஜெர்மனியில் மக்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்திய தபால் சேவை
ஜெர்மனியில் தபால் சேவை தொடர்பில் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக தபால் சேவைக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் மக்களால் முன்வைக்கப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. முக்கிய ஆவணங்கள் மற்றும் கடிதங்கள் உரிய நேரத்திற்கு வராமை மற்றும் தொலைந்து போகும் சம்பவங்கள் தொடர்பான மக்கள் முறைப்பாடு செய்கின்றனர்.
இது தொடர்பில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரையிலான காலப்பகுதியில் 26000 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 31700 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் 3400 முறைப்பாடுகள் போஸ்டல் என்ற அமைப்புக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நவீன காலத்தில் இணையம் மூலம் பயன்பாடுகள் அதிகரித்திருந்தாலும், கடிதம் ஊடாக தொடர்புகளை மேற்கொள்ளும் மக்கள் தற்போதும் அதிகளவில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.