ஜெர்மனியில் கடுமையாக்கப்பட்ட சட்டம்! 10,000 யூரோ வரை அபராதம்
ஜெர்மனியின் புகழ்பெற்ற கிறிஸ்துமஸ் சந்தைகள் எதிர்வரும் வாரங்களில் திறக்கப்படவுள்ளன.
இந்த நிலையில் பாதுகாப்பை தீவிரப்படுத்துமாறு பொலிஸ் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு உள்துறை அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அதற்கமைய, ஜேர்மனியின் கூரிய ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான புதிய தடையை அமுல்படுத்துவது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பில் அதிகாரிகளுக்கு ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
கத்தி தடையை மீறினால் 10,000 யூரோ வரை அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் நான்சி பேசர் தெரிவித்துள்ளார்.
ஒகஸ்ட் மாதம் மேற்கு நகரமான சோலிங்கனில் நடந்த மோசமான கத்தி தாக்குதல் பதிவாகியது. இதனையடுத்து பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு சட்டம் கடந்த மாதம் நிறைவேற்றப்பட்டது.
திருவிழாக்கள், விளையாட்டு நிகழ்வுகள், சந்தைகள், கண்காட்சிகள் மற்றும் பிற பெரிய நிகழ்வுகளில் கத்திகளை எடுத்துச் செல்வதை வெளிப்படையாக தடை செய்யப்பட்டுள்ளது.