ஜெர்மனியில் அதிவேகமாக பயணித்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! 1600 யூரோ அபராதம்
ஜெர்மனியில் பொது போக்குவரத்துக்கு பாதிப்பை ஏற்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பேர்ளின் நகரில் அதிவேக நெடுஞ்சாலையில் 200 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்த 26 வயதான நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிவேக போக்குவரத்து பாதையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியமை தொடர்பில், அதிகாரிகள் சோதனை முன்னெடுத்தனர். சந்தேக நபரான இளைஞன் போக்குவரத்து குற்றத்தை மீறியமை தொடர்பில் 1600 யூரோ அபாரம் விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மூன்று மாதங்களுக்கு சாரதியாக செயற்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதேவேளை அண்மைக்காலமாக போக்குவரத்து சட்டங்களை மீறும் செயற்பாடுகளில் இளைஞர் செயற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதன் காரணமாக 20 வயதுக்கும் 26 வயதுக்கும் உட்பட்டவர்களுக்கு வாகன சாரதி அனுமதி பத்திரம் வழங்கக்கூடாது என்ற கோரிக்கையை பலரும் முன்வைத்துள்ளனர். அண்மைக்காலமாக ஜெர்மனியில் அதிகளவான வாகன விபத்துக்கள் இடம்பெற்று வருவதுடன் உயிரிழப்புகளும் பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.