ஜம்மு-காஷ்மீரில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் – எல்லை பகுதியில் துப்பாக்கிச்சூடு!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே பாகிஸ்தான் துப்பாக்கிச் சூட்டுக்கு பதிலடியாக இந்தியா துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் குழுவை குறிவைத்து கடந்த 22 ஆம் தேதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 26 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
(Visited 1 times, 1 visits today)