ஜப்பானில் 15 நாட்களில் 1,300 அதிகமான நிலநடுக்கங்கள் – அச்சத்தில் மக்கள்

ஜப்பானில் 15 நாட்களில் 1,300க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் அச்சத்தில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
ககோஷிமா மாநிலத்தின் தொக்காரா தீவுக்கூட்டம் அருகே நிலநடுக்கம் 20 கிலோமீட்டர் ஆழம் கொண்டிருந்ததாக ஜப்பானிய வானிலை ஆய்வகம் தெரிவித்தது.
ஜப்பானின் தென்மேற்குப் பகுதியை 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் உலுக்கியுள்ளது. நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது என்று ஆய்வகம் கூறியது.
கடந்த மாதம் 21ஆம் திகதி முதல் இன்றுவரை அந்த வட்டாரத்தில் 1,300க்கும் அதிகமான முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வகம் குறிப்பிட்டது.
அடுத்து வரும் நாட்களில், அவ்விடத்தில் 6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)