ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டால் 300,000க்கும் மேற்பட்டோர் மரணம் நிகழும் என எச்சரிக்கை

ஜப்பானின் பசிபிக் கரையோரத்தில் மாபெரும் நிலநடுக்கம் நிகழ்ந்தால் பொருளாதாரத்தில் 1.8 டிரில்லியன் டொலர் நட்டம் ஏற்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய நிகழ்வால், பேரழிவை உண்டாக்கும் சுனாமிகள் உருவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழக்கூடும். 300,000க்கும் மேற்பட்டோர் மரணம் அடையக்கூடும் என்று அரசாங்க அறிக்கை ஒன்று குறிப்பிட்டது.
உலகில் நிலநடுக்கம் அதிகம் நேரும் நாடுகளில் ஜப்பான் ஒன்று. Nankai Trough எனும் கரடுமுரடான கடலடிப் பகுதியில் எட்டிலிருந்து ஒன்பது ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படுவதற்கு 80 விழுக்காடு வாய்ப்பு இருப்பதாக அரசாங்கம் சொன்னது.
சுமார் 1.23 மில்லியன் பேர் வெளியேற்றப்படக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டது. அது ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் 10 விழுக்காடு.
(Visited 22 times, 3 visits today)