ஜப்பானில் செல்லுபடியான கடவுச்சீட்டு இல்லாத மக்கள் – வெளிவந்த தகவல்

ஜப்பானிய குடிமக்களில் சுமார் 6 இல் ஒருவருக்கு மட்டுமே செல்லுபடியான கடவுச்சீட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
அமெரிக்காவில் செல்லுபடியான கடவுச்சீட்டு வைத்திருக்கும் குடிமக்களைவிட அந்த எண்னிக்கை மிகவும் குறைவாகும்.
ஜப்பானிய குடிமக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்துவந்தாலும், கொரோனா பெருந்தொற்றுக்கு முந்திய எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ஜப்பானில் 21.6 மில்லியன் செல்லுபடியான கடவுச்சீட்டு இருந்ததாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சு தெரிவித்தது.
ஜப்பானின் மொத்த மக்கள்தொகையில் அது சுமார் 17.5 சதவீதமாகும். கொரோனா பெருந்தொற்றுக்கு முன்பு ஜப்பானிய மக்கள்தொகையில் சுமார் கால்வாசி மக்கள் செல்லுபடியான கடவுச்சீட்டினை வைத்திருந்தனர்.
(Visited 8 times, 8 visits today)