ஜன்னல் இருக்கைகளில் ஏமாற்றிய அமெரிக்க விமான நிறுவனங்கள் – பயணிகளின் அதிரடி நடவடிக்கை

அமெரிக்க விமான நிறுவனங்களான டெல்டா மற்றும் யுனைடெட் எயார்லைன்ஸ் மீது மக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.
ஜன்னல் இருக்கைகள் என விளம்பரப்படுத்தப்பட்ட இடங்களில் உண்மையில் ஜன்னல்கள் இல்லாமல் இருக்கைகளை வழங்கியதாக பயணிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த வழக்குகள், நியூயார்க்கும் சான் பிரான்சிஸ்கோவும் உள்ள அமெரிக்க நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு நிறுவனத்திற்கும் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பயணிகளுக்காக மில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பீடு கோரப்பட்டுள்ளது.
போயிங் 737, 757 மற்றும் ஏர்பஸ் A321 விமானங்களில் சில இடங்களில் ஜன்னல் இல்லாத இடங்களை விண்டோ சீட் எனக் காண்பித்து கூடுதல் கட்டணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
பயணிகள் இவை பற்றி முன்பே தெரிந்திருந்தால், அவ்வாறு அமர விரும்பியிருக்க மாட்டார்கள் என வழக்கில் வாதிடப்பட்டுள்ளது. விமான நிறுவனங்களின் கருத்துக்கு பதிலளிக்கப்படவில்லை.