சுந்தர் பிச்சை உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களுக்கு இரவு விருந்து வைத்த டிரம்ப்

அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் மற்றும் மனைவி மெலனியா டிரம்ப், முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாகிகளுக்கு விருந்தை வழங்கினர்.
வெள்ளை மாளிகையில் இந்த சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விருந்தில் மெட்டா நிறுவனத்தின் மார்க் ஜுக்கர்பெர்க், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் சிஇஓ சத்யா நாதெல்லா, ஆப்பிள் சிஇஓ டிம் குக், கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாம் ஆல்ட்மேன் உள்ளிட்ட தொழில்நுட்பத் துறையின் முக்கியமான தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த விருந்தில் டெஸ்லா நிறுவனத்தின் நிறுவனர் எலான் மஸ்க் மட்டும் பங்கேற்கவில்லை.
விருந்துக்கான அழைப்பு வந்ததாகத் தெரிவித்த அவர், “தனிப்பட்ட காரணங்களால் கலந்துகொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.
விருந்தின் போது, தொழில்நுட்பத் துறையின் தற்போதைய வளர்ச்சி, எதிர்கால முதலீட்டு திட்டங்கள் மற்றும் அமெரிக்காவின் தொழில்நுட்பக் கொள்கைகள் குறித்து பரிமாறல்களும் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.