சிங்கப்பூரில் மீண்டும் பரவும் கொவிட் தொற்று – சுகாதார அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு

சிங்கப்பூரில் மீண்டும் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் மற்றும் தொற்று நோய் தடுப்பு பிரிவும் தெரிவித்துள்ளன.
பிற தொற்று நோய்களைப் போலவே, கொவிட் தொற்றின் அதிகரிப்பும் அவ்வப்போது எதிர்பார்க்கப்படுகின்றன
சிங்கப்பூர் சுகாதார அமைப்பினால் கொவிட் தொற்று பாதிப்புகளை சமாளிக்க முடியும் என சுகாதார அமைச்சர் ஓங் யீ கங் தன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாம் அனைவரும் நம்முடைய பங்கை நிறைவேற்றுவது முக்கியம் என்பதை அமைச்சர் ஓங் தெளிவுபடுத்தினார்.
குறிப்பாக, தடுப்பூசிகளை போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், அதுக்கான முன்பதிவுகளை https://vaccine.gov.sg/covid என்ற இணைய முகவரியில் செய்யுமாறும் அவர் கூறினார்.
மேலும், தனிப்பட்ட சுகாதார பழக்க வழக்கங்களை கடைபிடித்தல், உடல்நிலை சரியில்லாமல் இருக்கும்போது வெளியிடங்களில் ஒன்று கூடுதல் மற்றும் தேவையற்ற பயணங்களைக் குறைத்தல் வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இறுதியாக, கூட்ட நெரிசலான பகுதிகளுக்கு செல்லும்போதும் மூக்கு ஒழுகுதல் அல்லது காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருக்கும்போதும் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பதை திரு.ஓங் தெளிவுபடுத்தினார்.