‘குடு சலிந்து’வுக்கு பிடியாணை
பிணையில் விடுவிக்கப்பட்ட “குடு சலிந்து” என அழைக்கப்படும் சலிது மல்ஷிகா குணரத்னவை கைது செய்யுமாறு, பாணந்துறை நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகுமாறு “குடு சலிந்து”வுக்கு நீதிமன்றம் நிபந்தனை விதித்தது.
எனினும் அவர், நேற்றைய தினம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (23) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் உண்மைகளை அறிவித்தனர்.
அந்த உண்மைகளை கருத்திற்கொண்ட நீதவான் நீதிமன்றம், “குடு சலிந்து”வை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு பிடியாணை பிறப்பித்திருந்தது.
(Visited 2 times, 1 visits today)