கிரேக்கத்தை வாட்டி வதைக்கும் வெப்பநிலை : பிரபல சுற்றுலாத்தளம் மூடல்!

அதிகரித்து வரும் வெப்பநிலை கிரேக்கத்தை வாட்டி வதைப்பதால், செவ்வாய்க்கிழமை அக்ரோபோலிஸ் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
தலைநகர் ஏதென்ஸில் உள்ள பிரபலமான தளம் உள்ளூர் நேரப்படி மதியம் 13:00-5:00 (BST 11:00-15:00 BST) வரை மூடப்படும் என்று நாட்டின் கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
செவ்வாயன்று ஐரோப்பிய நாட்டின் சில பகுதிகளில் அதிகபட்சமாக 42C (107F) வெப்பநிலை பதிவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது, மேலும் பல பிராந்தியங்களில் மிக அதிக ஆபத்தை குறிக்கும் வகையிலான நான்காம் வகை காட்டுத்தீ எச்சரிக்கை உள்ளது.
கோடைகாலத்தின் ஆரம்ப வெப்ப அலையால் பாதிக்கப்பட்ட வாரங்களுக்குப் பிறகு, பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினின் கேட்டலோனியா பகுதி உட்பட கண்டத்தின் பிற பகுதிகளில் காட்டுத்தீ ஏற்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் இது வந்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)