கடவுச்சீட்டு பற்றாக்குறை – வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் இலங்கையர்கள்
இலங்கையர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 7,50,000 கடவுச்சீட்டுகளுக்கு மேலதிகமாக புதிய கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான உத்தரவை அரசாங்கம் இதுவரை வழங்கவில்லை என தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கடவுச்சீட்டு தட்டுப்பாடு தொடர்ந்தால் இலங்கையர்கள் வேலைக்காக நாட்டை விட்டு வெளியேற முடியாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகலாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இலங்கையர்களிடமிருந்து அதிகளவான கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்கள் குவியும் எனவும், கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சையில் தோற்றுவதற்கு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவது கட்டாயம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டிற்குச் செல்ல விரும்புபவர்களால் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு அடுத்த சில வாரங்களில் சுமார் 30,000 கடவுச்சீட்டு விண்ணப்பங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
நாட்டிற்கு வேலை தேடும் இலங்கையர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி கடவுச்சீட்டு கிடைப்பதை உறுதிப்படுத்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலையீட்டை கோரியுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள் தெரிவிக்கின்றனர்.