எலான் மஸ்க்கின் கருத்தால் டெஸ்லா கார்கள் மீது வெறுப்படைந்த ஐரோப்பிய மக்கள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0001.jpg)
உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரரான எலான் மஸ்க்கிற்குச் சொந்தமான டெஸ்லாவின் விற்பனை ஐரோப்பா முழுவதும் பாரிய அளவு சரிந்துள்ளது.
ஜெர்மனியில் AfD கட்சிக்கு எலோன் மஸ்க் தலைமை தாங்குவார் என்று நேரடி ஊடகங்களில் அறிவித்த பிறகு, டெஸ்லாவுக்கான தேவையை நுகர்வோர் குறைத்துள்ளதாக ஊடக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
ஜெர்மனியில் புதிய டெஸ்லா கார் பதிவுகள் ஆண்டுக்கு ஆண்டு சுமார் 60 சதவீதம் கடுமையாகக் குறைந்துள்ளதாக ஒரு ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
பிரான்ஸில் டெஸ்லா விற்பனை 63 சதவீதமும், சுவீடனில் 44 சதவீதமும் குறைந்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
டெஸ்லாவுக்கான தேவை நோர்வேயில் 38 சதவீதமும், நெதர்லாந்தில் 42 சதவீதமும், ஐக்கிய இராச்சியத்தில் 40 சதவீதமும் குறைந்துள்ளது.
ஐரோப்பாவில் மற்ற EV கார்களுக்கான தேவை அதிகரிப்பது டெஸ்லாவின் தேவையைக் குறைக்கும்.
(Visited 10 times, 10 visits today)