ஈரானில் ரோந்து சென்ற காவல்துறையினர் மீது துப்பாக்கிச்சூடு – ஐந்துபேர் பலி!

ஈரானின் தென்கிழக்கு மாகாணமான சிஸ்தான் மற்றும் பலுசிஸ்தானில் துப்பாக்கிதாரிகள் ஐந்து காவல்துறை அதிகாரிகளைக் கொன்றதாக மாநில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தலைநகரான தெஹ்ரானுக்கு தென்கிழக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் (800 மைல்) தொலைவில் உள்ள ஈரான்ஷஹர் நகருக்கு அருகிலுள்ள சாலையில் அதிகாரிகள் ரோந்து சென்றபோது குறித்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் எத்தனை காவல்துறையினர் காயமடைந்தனர் என்பது தெரிவிக்கப்படவில்லை. தாக்குதலுக்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லையை ஒட்டியுள்ள இந்த மாகாணம், போராளிக் குழுக்கள், ஆயுதமேந்திய போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மற்றும் ஈரானிய பாதுகாப்புப் படையினரிடையே அவ்வப்போது கொடிய மோதல்களின் தளமாக இருந்து வருகிறது. இது ஈரானின் மிகவும் வளர்ச்சியடையாத மாகாணங்களில் ஒன்றாகும்.