இலங்கை மக்களிடம் நீர் தொடர்பில் விடுக்கப்பட்ட கோரிக்கை

Lஇலங்கையில் தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக, குடிநீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வறட்சி நிலை காரணமாக, முக்கிய நீர்த்தேக்கங்களில் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில், நீர் தேவையும் அதிகரித்துள்ளது.
இது பொதுமக்கள் மற்றும் தொழில்துறைகளுக்கு பெரும் சவாலாக அமையும் அபாயம் உள்ளதாகவும், குடிநீரை முறையாக பகிர்ந்தளிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியமற்ற செயற்பாடுகளுக்கான நீர் பயன்பாட்டைக் குறைத்து, அன்றாடம் தேவையான குடிநீர் மற்றும் சுகாதாரப் பயன்பாடுகளுக்கே நீரை உபயோகிக்குமாறு பொதுமக்களுக்குச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும், இந்தச் சூழலில் ஏதேனும் நீர் விநியோகம் தொடர்பான சிக்கல்கள் இருப்பின், பொதுமக்கள் துரித உதவி எணியான 1939 என்ற எண்ணை அழைத்து தொடர்புகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.