இலங்கை இன்றைய முக்கிய செய்திகள் செய்தி முக்கிய செய்திகள்

இலங்கையில் டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயற்படுத்த இலங்கை தலைவர்கள் இணக்கம்

இலங்கையில் இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் இணக்கம் வெளியட்டுள்ளனர்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளர்.

கொழும்பில் இடம்பெற்ற பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

பிம்ஸ்டெக் உறுப்பு நாடுகள் வர்த்தகம், முதலீடு, அபிவிருத்தி, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம், பாதுகாப்பு, விவசாயம், உணவுப் பாதுகாப்பு, மக்களிடையே தொடர்பு, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் இணைப்பு உள்ளிட்ட துறைகளில் கூட்டு ஒத்துழைப்பு நோக்கங்களை ஆராய்ந்து வருகின்றன. கடந்த பத்தாண்டுகளில் இந்தியா வேகமாக டிஜிட்டல் மாற்றத்திற்கு உட்பட்டுள்ளது.

டிஜிட்டல் மயமாக்கலை இணைப்புக்கான வழிமுறையாக மட்டுமல்லாமல் – சமத்துவம் மற்றும் வாய்ப்புக்கான ஊடகமாகவும் இந்தியா ஏற்றுக்கொண்டது. அதுவே எமது டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பின் சாராம்சமாகும்.

இந்தியா இன்று அதன் 1.3 பில்லியன் மக்களுக்கு டிஜிட்டல் அட்டைகளை வழங்கியுள்ளது. எம்மத்தியில் 1.2 பில்லியன் நவீன கையடக்க தொலைபேசி பயனர்கள், 950 மில்லியன் இணைய பயனர்கள் உள்ளனர்.

உலகின் நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் 40 சதவீதம் இந்தியாவில் நடைபெறுகிறது. கடந்த பத்தாண்டுகளில், பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட எட்டு மடங்கு அதிகமான ஒப்டிகல் பைபர்களை இந்தியா அமைத்துள்ளது.

அந்த வகையில் முழு பிராந்தியத்துக்கும் வாய்ப்புகள் மற்றும் சாத்தியக்கூறுகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான விரைவான வழிமுறைகளைப் பின்பற்றுவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் சமீபத்திய இந்திய விஜயமானது இந்த மிக முக்கியமான ஒத்துழைப்புத் தூணான மக்களை மையமாகக் கொண்ட டிஜிட்டல் மயமாக்கலுக்கு மேலும் உத்வேகத்தை அளித்தது.

இந்திய உதவியுடன் 300 கோடி ரூபா மதிப்பிலான தனித்துவமான டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை செயல்படுத்துவதை விரைவுபடுத்த இலங்கை தலைவர்கள் ஒப்புக்கொண்டனர். டிஜிட்டல் பொருளாதாரம் குறித்த கூட்டுப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் டிஜிலொக்கரை செயல்படுத்துவது குறித்த தொழில்நுட்ப கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்திய சுற்றுலாப் பயணிகளுக்கான கட்டணங்களை எளிதாக்குவதற்காக கடந்த ஆண்டு இலங்கையில் யு.பி.ஐ. கொடுப்பனவுகள் ஆரம்பிக்கப்பட்டன.

இரு நாடுகளின் நலனுக்காக யு.பி.ஐ. டிஜிட்டல் கொடுப்பனவுகளின் பயன்பாட்டை விரிவுபடுத்துவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

எமது ஒவ்வொரு நாடுகளின் டிஜிட்டல் பயணங்களுக்கும் உத்வேகமளிக்கவும், பிம்ஸ்டெக் பிராந்தியத்துக்கான முன்னேற்றத்துக்கான புதிய பாதைகளை மேலும் திறக்கவும் இந்த தளத்தைப் பயன்படுத்துவோம் என்று நம்புகின்றோம் என்றார்.

(Visited 4 times, 4 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை