இலங்கையில் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் வெப்பம் – மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையின் பல மாவட்டங்களில் நிலவும் மிகவும் வெப்பமான வானிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
இன்றைய தினமும் நாட்டின் பல இடங்களில் மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலையானது எச்சரிக்கை மட்டத்துக்கு உயரும் என்று அதன் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமேல், மேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும், முடிந்தவரை நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘எச்சரிக்கை’ வெப்பநிலையின் கீழ், நீண்ட நேரம் வெளிப்பகுதியில் தொடர்ந்து செயல்பாடுகளில் ஈடுபாடுவதால் வெப்பப் பிடிப்புகள் ஏற்படக்கூடும்.
எனவே, பொதுமக்கள் நீரேற்றத்துடன் இருக்கவும், முடிந்தவரை அடிக்கடி வெளிப்புற செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.