இலங்கையில் அதிகாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி
கல்கிஸ்சை – வட்டரப்பல பகுதியில் இன்று அதிகாலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி 36 வயதுடைய நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், 20 வயதுடைய இளைஞன் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வீட்டில் இருந்த இருவரையும் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
(Visited 1 times, 1 visits today)