இலங்கையில், அடுத்த ஆண்டு ஜனவரியில் இருந்து மின் கட்டணம் 32% அதிகரிக்கும்?
நவம்பர் 01 ஆம் திகதிக்குள் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு தேவையான தரவுகளை வழங்குமாறு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது.
இதன்படி அடுத்த வருடம் ஜனவரி 01 ஆம் திகதி முதல் இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேவையான தரவுகள் விரைவில் வழங்கப்படும் என இலங்கை மின்சார சபையின் பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன தெரிவித்தார்.
அடுத்த 3 மாதங்களுக்குத் தேவையான 54 பில்லியன் ரூபாவைக் கண்டறிய மின் கட்டணத்தை 32% உயர்த்துமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் இரண்டு வாரங்களுக்கு முன்னர் கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் அதற்கு இதுவரை ஆணையம் நல்ல பதிலை அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
(Visited 3 times, 1 visits today)