இலங்கையில் அச்சுறுத்தும் ஆபத்து – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் டெங்கு அபாய வலயங்களின் எண்ணிக்கை நாடளாவிய ரீதியில் 24 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு இதனை தெரிவித்துள்ளது.
இதனால், எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்கள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது மழைகாலம் நிலவுவதால் டெங்கு நோய் அதிகமாக பரவக்கூடும் நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
(Visited 8 times, 1 visits today)