இந்தியாவில் கைவிடப்பட்ட மர்ம காரில் 54 கிலோகிராம் தங்கக் கட்டிகள்
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கைவிடப்பட்டிருந்த காரில் 54 கிலோகிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மெண்டொரி கிராமத்தில் உள்ள பண்ணை வீட்டில் அந்தக் கார் இருந்தது. இதுவரை இல்லாத அளவில் அந்த மாநிலத்தில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
வருமான வரித் துறை, போபால் (Bhopal) பொலிஸார் ஆகியவற்றின் அதிகாரிகள் தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு 41 கோடி ரூபாய் என்று நம்பப்படுகிறது.
காரிலிருந்து 10 கோடி ரூபாய் ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் அதிகாலை வேளையில் ஒரு சொத்து முகவரின் அலுவலகத்தையும் வீட்டையும் அதிகாரிகள் சோதனையிட்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட தங்கக் கட்டிகளும் ரொக்கமும் அந்த முகவருக்குத் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.
(Visited 3 times, 3 visits today)