அமெரிக்க மாநிலம் ஒன்றில் அதிரடியாக 1000 இராணுவத்தினரை களமிறக்கும் டிரம்ப்

அமெரிக்க மாநிலம் ஒன்றில் அதிரடியாkக 1000 இராணுவத்தினரை களமிறக்கும் டிரம்ப
அமெரிக்காவின் லூசியானா மாநிலத்தின் நகர்ப்புற இடங்களில் இராணுவத் துருப்பினர் 1,000 பேரைப் பணியில் அமர்த்த டிரம்ப் நிர்வாகம் பரிந்துரைக்கவுள்ளது.
சட்ட அமலாக்க நடவடிக்கைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அலுவலகத்தின் ஆவணங்களை மேற்கோள்காட்டி இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் பல நகரங்களில் வன்முறைச் சம்பவங்கள் குறைந்தபோதும் குற்றச் செயல்களை முக்கிய விவகாரமாகக் கையாள ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் முயற்சி செய்துள்ளார்.
இந்த திட்டத்திற்கமைய, நியூ ஓர்லீன்ஸ் , பேட்டோன் ரூஜ் போன்ற நகரங்களில் சட்ட அமலாக்கப் பிரிவுகளுக்கு இணையாக ராணுவம் செயல்பட வழிவகுக்கப்படும் என்று கூறப்பட்டது.
(Visited 2 times, 2 visits today)