அமெரிக்க குடிமக்களையும் நாடு கடத்த திட்டமிட்டு வரும் ஜனாதிபதி டிரம்ப்

அமெரிக்காவில் கொடூர குற்றங்களில் ஈடுபடும் அமெரிக்க குடிமக்களையும் நாடு கடத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
கொடூர கொலை குற்றங்களில் ஈடுபடும் அமெரிக்க குடிமக்களையும் எல் சால்வடோருக்கு நாடு கடத்துவது பற்றி பரிசீலித்துவருவதாக தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாகத் தங்கியிருந்தவர்களையே மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோருக்கு டிரம்ப், நாடு கடத்தி வந்தார்.
எல் சால்வடோர் ஜனாதிபதி நயீப் புக்கலேவை சந்தித்த பின் டிரம்ப் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கலவரங்களுக்கும், மனித உரிமை மீறல்களுக்கும் எல் சால்வடோர் நாட்டுச் சிறைச்சாலைகள் பெயர் பெற்றார்.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்படுவோரை பராமரிக்க அமெரிக்க அரசு எல் சால்வடோருக்கு 6 மில்லியன் டொலர் அளித்துள்ளது.
(Visited 8 times, 8 visits today)