அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்புயல் – 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை
அமெரிக்காவில் வரலாறு காணாத பனிப்பொழிவும், பனிப்புயலும் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், வடக்கு புளோரிடா, கரோலினா மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில், 3 கோடி பேருக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு புளோரிடாவில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாடசாலை, கல்லூரிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
குளிரில் இருந்து தப்பிக்க, அரசு சார்பில் குளிர்காயும் உஷ்ண மையங்களை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(Visited 3 times, 3 visits today)