அமெரிக்காவில் உரசிக்கொண்ட விமானங்கள் – உயிர் தப்பிய நூற்றுக் கணக்கான பயணிகள்
![](https://iftamil.com/wp-content/uploads/2025/02/IMG-20250207-WA0002.jpg)
அமெரிக்காவின் சியெட்டல் நகர விமான நிலையத்தில் இரண்டு விமானங்கள் உரசிக்கொண்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
Seattle-Tacoma சர்வதேச விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.
Japan Airlines விமானம் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்தபோது அதன் இறக்கைப் பகுதி Delta Airlines விமானம் மீது உரசியது.
அங்கு நிறுத்தப்பட்டிருந்த Delta Airlines விமானம் சற்றுக் குலுங்கியதாகப் பயணிகள் சிலர் கூறினர்.
Delta Airlines விமானத்தின் வால் பகுதி சேதமடைந்ததால் விமானத்தில் இருந்த 142 பேரும் இன்னொரு விமானத்துக்கு மாற்றப்பட்டனர்.
விமானம் மெக்சிகோவுக்குப் புறப்படவிருந்தது. என்ன நடந்தது என்பதை அதிகாரிகள் தற்போது விசாரிக்கின்றனர். சம்பவத்தால் விமான நிலையப் பணிகள் பாதிக்கப்படவில்லை.
(Visited 2 times, 2 visits today)