அமரிக்க ஜனாதிபதியாக பதவியேற்க தயாராகும் டிரம்ப் – வரவேற்க தயாராகும் பிரபலங்கள்
அமெரிக்கா தனது புதிய ஜனாதிபதியை வரவேற்க தயாராகி வரும் நிலையில் ஆசியாவும் அதற்கு தயாராகி வருகிறது.
டொனல்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்காவின் ஜனாதிபதியாகவுள்ள நிலையில் எதிர்வரும் 20ஆம் திகதி பதவியேற்பு நிகழ்வு நடைபெறும்.
அமெரிக்கா, ஜப்பான், இந்தியா, ஆஸ்திரேலியா ஆகியவற்றின் வெளியுறவு அமைச்சர்கள் வாஷிங்டன் செல்கின்றனர்.
ஜனாதிபதி பதவி ஏற்பு விழாவைத் தொடர்ந்து அவர்களின் சந்திப்பு இடம்பெறும்.
ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தகேஷி இவாயா (Takeshi Iwaya), இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர், ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வோங் (Penny Wong) ஆகியோருடன் அமெரிக்காவின் புதிய வெளியுறவு அமைச்சராகப் பொறுப்பேற்கப் போகும் செனட்டர் மார்கோ ரூபியோவும் (Marco Rubio) சந்திப்பில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 2 times, 2 visits today)