Site icon Tamil News

மகளிர் தின விழா குத்துவிளக்கு ஏற்றி தொடங்கபட்டது

புதுக்கோட்டை மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அரிமளம் ஒன்றியம்  தேக்காட்டூர் ஊராட்சியில் பஞ்சாயத்து அளவிலான குழுக் கூட்டமைப்பில் இருந்து மகளிர் தின விழாஇன்று காலை நமணசமுத்திரத்தில் உள்ள ஸ்ரீரெங்கா மண்டபத்தில் நடைபறெ்றது.

ஊராட்சி மன்ற தலைவர் திருமதி.முத்துலெட்சுமி சங்கர் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி விழாவினை தொடங்கி வைத்தார்.திருமதி. செந்தாமரை அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கவுரவிக்கபட்டது.

வட்டார இயக்க மேலாளர் திருமதி.வெள்ளையம்மாள் அவர்கள் பெண்கள் முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினார்.நடனம், நாடகம், கோலாட்டம், பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

விளையாட்டு போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்சிக்கு துணைத்தலைவர் திருமதி. அனுராதா, ஊராட்சி செயலர் திரு.சுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் பழனிவேலு ரமா,வார்டு உறுப்பினர்கள், வட்டார ஒருங்கிணைப்பாளர்கள்,

வட்டார மருத்துவ அலுவலர், கிராம செவிலியர், ஆசா பணியாளர்கள் ,WHV பணியாளர், ஏ சி எம் சுகாதார நல பணியாளர்கள், வட்டார வள பயிற்றுநர் ,PLF பொறுப்பாளர்கள் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்சியினை வட்டார ஒருங்கிணைப்பாளர்திருமதி. கரோலின் சாந்தி அவர்கள் தொகுத்து வழங்கினார்.தலைவி திருமதி. ஸ்டலெ்லா மேரி அவர்கள் நன்றி கூறினார்.இதில்48 சு உதவி குழுக்கள் 623 பேர் கலந்து கொண்டனர்.

Exit mobile version