Site icon Tamil News

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாவேந்தர் பாரதிதாசன் நூலகம்

நல்ல மனிதர்களை உருவாக்கும் திறமை சிறந்த புத்தகத்திற்கு மட்டுமே உள்ளது என்பதை நன்கு அறிந்ததே தமிழக அரசு பல்வேறு இடங்களில் நூலகங்களை அமைத்து வருகிறது.

அவ்வண்ணம் திருக்கழுக்குன்றத்தில் பழமை வாய்ந்த நூலகம் இயங்கி வந்தது, சிதிலமடைந்த நூலக கட்டிடத்தை இடித்து புதியதாக நூலக கட்டிடம் கட்ட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் புத்தக வாசிப்பாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்

தனை தொடர்ந்து காஞ்சிபுரம் எம் பி செல்வம் தனது தொகுதி நிதியிலிருந்து 20 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து புதிய நூலக கட்டிடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றதை அடுத்து கட்டிட பணிகள் நிறைவுற்று இன்றைய தினம் அதன் திறப்பு விழா நடைபெற்றது,

பாவேந்தர் பாரதிதாசன் என்கின்ற பெயரோடு உள்ள நூலகத்தை சிறு குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன் ரிப்பன் வெட்டியும் குத்து விளக்கேற்றி வைத்தும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தார்

நிகழ்ச்சியில் காஞ்சி நாடாளுமன்ற உறுப்பினர்  செல்வம் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, முன்னாள் எம் எல் ஏ தமிழ்மணி,  திருக்கழுக்குன்றம் பேரூராட்சி தலைவர் யுவராஜ் மாவட்ட கவுன்சிலர் ஆர் கே ரமேஷ் பேரூராட்சி கவுன்சிலர்கள் திமுக  நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version