Site icon Tamil News

ரஷ்ய-உக்ரைன் போர் மண்டலத்தில் சிக்கிய இலங்கையர்களின் கதி

2022 இல் தொடங்கிய ரஷ்ய-உக்ரைன் போரில்  இலங்கையின் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்களும், ரஷ்யாவில் வேறு வேலைகளில் பணியாற்றியவர்களும் இணைந்திருப்பது ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறாக, போர் முனையில் இருந்த பலர்  கொழும்பு ஊடகங்களுக்கு உரையாற்றும் போது தாம் எதிர்கொண்ட கடுமையான அனுபவங்களை விளக்கினர்.

தற்போது போர் களத்தில் இருக்கும் மற்றுமொரு இராணுவ வீரர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்,

“ட்ரோன்களிடம் இருந்து தப்புவது ரொம்பக் கஷ்டம். நம் தலைக்கு மேலேயே வரும் நேற்றும் நான் மிகவும் சிரமப்பட்டுத் தப்பித்தேன். அது உங்களுக்குப் புரியவில்லை. எங்களுடன் வந்த ஐந்து பேர் காயம் அடைந்தனர். ஒருவர் இறந்தார்.” என தெரிவித்துள்ளார்.

அம்பாறை, மிஹிந்துபுர கிராமத்தைச் சேர்ந்தவர். டி. எஸ். நிரோஷா ஓய்வு பெற்ற இராணுவ வீரரான அவர், நிதி நெருக்கடி காரணமாக மார்ச் 14ம் திகதி ரஷ்யா சென்றிருந்தார்.

“அவர்கள் மிகவும் மனிதாபிமானமற்றவர்கள், எங்களுக்கு மூன்று பேரைத் தெரியும், அவர்கள் கூலி கேட்டு பயிற்சி செய்ய முடியாது என்று சொல்லி, அவர்களை நேரடியாக போர் களத்திற்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டார்கள்.

மறுநாள், எவரும் எஞ்சியிருக்கவில்லை,    இந்நிலையில் தங்களை நாட்டிற்கு மீள அழைக்க உதவ வேண்டும், இங்குள்ள அனைவரையும் இலங்கைக்கு மீள அழைத்துவர வேண்டும் என”  தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த காணொளியை அனுப்பிய பிறகும் இது வரை நிரோஷா பற்றி எந்த தகவலும் இல்லை என்கின்றனர் உறவினர்கள்.

Exit mobile version