Site icon Tamil News

வாட்ஸ் அப் வெப்பில் அறிமுகமாகும் வசதி!

உலகெங்கிலும் வாட்ஸ் அப் தளத்தை கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். என்னதான் இவர்களுக்கு போட்டியாக பல சேட்டிங் தளங்கள் கொண்டுவரப்பட்டாலும், வாட்ஸ் அப் தளத்தின் இடத்தை யாராலும் பிடிக்க முடியவில்லை. மக்கள் மத்தியில் அந்த அளவுக்கு நம்பகத்தன்மையை பெற்றுவிட்டது வாட்ஸ் அப்.

வாட்ஸ் அப் நிறுவனமும் பயனர்களை தங்களுடைய செயலியிலேயே தக்க வைக்க பல புதிய அப்டேட்களை அவ்வப்போது வெளியிட்டு வருகின்றனர். அப்படி அவர்கள் வெளியிட்ட வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் என்ற அப்டேட் பயனர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது. பயனர்கள் தாங்கள் விரும்பும் புகைப்படங்கள், காணொளிகளை வாட்ஸ் அப் ஸ்டேட்டஸாக வைத்து மகிழ்ந்தனர். அதேபோல ஓய்வு நேரத்தில் பிறர் வைக்கும் ஸ்டேட்டஸ்களை பார்ப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

இந்த அற்புதமான அப்டேட் இதுவரை ஸ்மார்ட் போன் செயலிகளில் மட்டுமே பயன்படுத்தும் படியாக இருந்து வந்தது. இப்போது கொடுத்துள்ள புதிய அப்டேட்டில் கணினியில் whatsapp web பயன்படுத்துவோரும் ஸ்டேட்டஸ் வைக்க முடியும் என்ற அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இனிய பயனர்கள் அவர்களின் whatsapp வெப் பதிப்பில் இருந்து ஸ்டேட்டஸை வைக்கலாம்.

வாட்ஸ் அப் நிறுவனம் இந்த புதிய அம்சத்தை பீட்டா பயனர்களிடம் சோதிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பயனராக இருப்பவர்கள் தங்களுடைய கணினியில் இந்த அம்சத்தை பயன்படுத்திப் பார்க்கலாம். இந்த அம்சம் whatsapp வெப் பீட்டா பதிப்பு 2.2353.59 என்கிற வெர்ஷனில் வெளிவந்துள்ளது. இனி வாட்ஸ் அப் எல்லா விதமான சாதனங்களிலும் ஒரே மாதிரி செயல்படும். அதாவது வாட்ஸ் அப் செயலியில் நீங்கள் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை கம்ப்யூட்டரிலும் செய்யலாம்.

இந்த புதிய அப்டேட்டுக்குப் பிறகு பயனர்கள் தங்களுடைய கம்ப்யூட்டர், டேப்லெட் போன்றவற்றிலிருந்தும் ஸ்டேட்டஸ் அப்டேட் செய்ய முடியும். அதேபோல ஐபாடிற்கான வாட்ஸ் அப்பையும் பீட்டா டெஸ்டர்கள் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை தற்போது எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் நிறுவனம் அனுமதிக்கவில்லை.

குறிப்பிட்ட சில பயனர்கள் மட்டுமே பயன்படுத்தும்படி வெளிவந்துள்ள இந்த அம்சம் இனிவரும் காலங்களில் கொஞ்சம் கொஞ்சமாக எல்லா பயனர்களும் பயன்படுத்தும் வகையில் வெளிவரும் என சொல்லப்படுகிறது.

Exit mobile version