Tamil News

விரைவில் நிலவை நெருங்கும் சந்திரயான்-3! இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

சந்திரயான்-3-ன் உயரத்தை மேலும் அதிகரிக்க இன்று பிற்பகல் 2.30 மணியளவில் 5-வது கட்டமாக சந்திரயான் விண்கலத்தின் சுற்று வட்டப்பாதை உயர்த்தப்பட்டது.

சந்திரயான் சுற்று வட்டப்பாதை உயர்த்தும் பணி வெற்றிகரமாக நிறைவடைந்து இருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலம் 1,27,609 கிமீ X 236 கிமீ சுற்றுப்பாதையை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுகளுக்குப் பிறகு அடையப்பட்ட சுற்றுப்பாதை உறுதிப்படுத்தப்படும், ”என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலம் ஆகஸ்ட் 1 ஆம் திகதி பூமியின் சுற்று வட்டப்பாதையில் இருந்து வெளியேறி நிலவை நோக்கி பயணிக்க தொடங்கும். ஆகஸ்ட் 5 ஆம் திகதி நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் சந்திரயான் செல்லும் எனவும் ஆகஸ்ட் 5-ல் இருந்து 23 ஆம் திகதி வரை நிலவின் சுற்று வட்டபாதைக்குள் பயணிக்கும் சந்திரயான், ஆகஸ்ட் 23 ஆம் திகதி மாலை 5.47க்கு நிலவில் மேற்பரப்பில் லேண்டர் தரையிறங்கும்.எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Exit mobile version