Site icon Tamil News

எதிர்பார்த்த விலையை விட 318 மடங்கு அதிக விலையில் ஏலம் போன ஐபோன்

பழைய ஐபோன் ஒன்று 1,90,372 டொலருக்கு ஏலம் விடப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் ஐபாட், ஐபோன் மற்றும் மேக் சாதனங்கள் இப்போது பழங்காலத்து பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. அவை ஆயிரக்கணக்கான டொலர்களுக்கு ஏலம் விடப்படுகிறது. முதல் முறை வெளியான ஐபோன் சாதனம் ஒன்று சமீபத்தில் 1,90,372 டொலருக்கு ஏலம் விடப்பட்டு சாதனை படைத்துள்ளது.

இந்த ஐபோன் மாடல் அது தொடக்கத்தில் உருவாக்கப்பட்ட அசல் பாக்ஸ் உடன் சீல் வைக்கப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது அதை யாரும் இதுவரை பயன்படுத்தவில்லை.

நான்கு ஜிபி வேரியெண்டான இந்த ஐபோன் மாடல், அதன் வெளியீட்டின்போது கூட அரிதாகப் பார்க்கப்பட்டது. ஏனென்றால் அந்த சாதனம் குறைவாகவே உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. ஏலத்தின் தொடக்கத்தின்போது அதன் மதிப்பு 1 லட்சம் டொலர் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு, 50 ஆயிரத்தில் இருந்து 1 லட்சம் டொலர் வரை இந்த சாதனத்தை விற்றுவிடலாம் என ஏல நிறுவனமான LCG எதிர்பார்த்தது.

அதன்படி கடந்த ஜூன் மாதம் 30 ஆம் திகதி 10,000 டொலருடன் ஏலம் தொடங்கி, ஜூலை 13ஆம் திகதி வரை சுமார் 41000 டொலர் வரை ஏலம் சென்றது. இந்த ஏலம் நேற்று திடீரென உயர்ந்து, இறுதி நேரத்தில் 1,08,356 டொலராக விலை உயர்ந்தது. இறுதியில் 158,644 டொலர் ஏல விலையுடன் நிறைவடைந்தது. மொத்தமாக அதன் வரி அனைத்தும் சேர்த்து 190,372 டொலர்களுக்கு இந்த ஐபோன் விற்கப்பட்டது.

தான் எதிர்பார்த்த விலையை விட சுமார் 318 மடங்கு அதிக விலைக்கு இந்த சாதனம் எலத்தில் விற்கப்பட்டுள்ளதாக LCG நிறுவனம் தெரிவித்துள்ளது.

Exit mobile version