Site icon Tamil News

வடக்கு ஆளுநருடன் சுமந்திரன் எம்.பி சந்திப்பு

வடக்கு மாகாண ஆளுநராகப் பதவியேற்ற பி.எஸ்.எம். சார்ள்ஸை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்றைய தினம் இந்த சந்திப்பு நடந்துள்ளது.

இந்தச் சந்திப்பின் போது வடக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், எதிர்கால வளர்ச்சித் திட்டங்கள், நிர்வாக நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.

வடக்கு மாகாண ஆளுநராக இருந்த ஜீவன் தியாகராஜா ஐனாதிபதியால் நீக்கப்பட்டு புதிய ஆளுநராக சார்ள்ஸ் நியமிக்கப்பட்டிருக்கின்ற நிலையில் முதல் தடவையாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

Exit mobile version