Site icon Tamil News

இலங்கை இணையத்தளங்கள் மீது தாக்குதல்கள்?

இலங்கையில் உள்ள இரண்டு அரச நிறுவனங்களின் முக்கிய இணையத்தளங்கள் ஊடுருவப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஊடுருவலாளர்களின் தாக்குதல்களினால் கசிந்தததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் மத்திய வங்கியின் தளங்களே தாக்கப்பட்டதாக இணையத்தளங்களின் புலனாய்வு தளமான போல்க்கன்பீட்ஸ் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த மார் 2ஆம் திகதியன்று இந்த இணையத்தாக்குதல்கள் இடம்பெற்றதாக போல்க்கன்பீட்ஸ் (FalconFeeds.io.) குறிப்பிட்டுள்ளது.

குறித்த இணையத்தில் ஊடுருவலாளர்கள், அந்த இணையத்தளங்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாக காட்டும் பதிவை பிரசுரித்திருந்தனர். இதற்கு முகவர்களாக கெல்வின் செக்கியுரீட்டி என்ற பெயரை அவர்கள் பதிவிட்டிருந்தனர்.

கெல்வின் செக்கியுரீட்டி என்ற இந்த பெயரில் கொலம்பியா, மெக்சிக்கோ மற்றும் சிலி ஆகிய நாடுகளில் அடிக்கடி இணையத்தாக்குதல்கள் இடம்பெற்று வருவதாக போல்க்கன்பீட்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இதனை இலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேனல் நளின் ஹேரத் மறுத்துள்ளார்.

Exit mobile version