Site icon Tamil News

இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவு உயர்வு

இலங்கையில் எரிசக்தி தேவை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

அண்மைக் காலத்தில் பதிவான அதிகூடிய ஆற்றல் தேவை நேற்றைய தினம் பதிவானதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

நேற்றைய எரிசக்தி தேவையை பூர்த்தி செய்ய  49.53 ஜிகாவாட் தேவைப்பட்டது. இதில் 32.39  ஜிகாவாட் மற்றும் தசமங்கள் அனல் மின் நிலையங்களில் இருந்து பெறப்பட்டுள்ளன.

இது மொத்த தேவையில் 68.37 சதவீதம் ஆகும். 9.53  ஜிகாவாட், நீர்மின்சாரத்தில் இருந்து முடிக்கப்பட்டுள்ளது. இது மொத்த தேவையில் 20.11 சதவீதம் ஆகும்.

அதன்படி இன்று 50 ஜிகாவாட்களை தாண்டும் சக்தி தேவைப்படலாம் என தாம் நம்புவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அம்பாந்தோட்டை டீசல் மின் உற்பத்தி நிலையத்தின் ஜெனரேட்டர்கள் உட்பட அனைத்து அனல் மின் நிலையங்களிலும் தற்போதைய தேவைக்கு ஏற்ற வகையில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version